பொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைமுடியை பெற

0
2680
எலுமிச்சை சாறு மற்றும் நீர் சம அளவு எடுத்து அதில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். குறைந்தது 4 மணி நேரம் கழித்து அந்தகலவையை தலையில் தடவுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து லேசான வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்தால் பொடுகு வரவே வராது. முடியின் அடர்த்தி நீங்கள் ஆச்சரியப்படும்படி வளரும்.
1. வெந்தய தெரபி செய்ய
தேவையானவை:
வெந்தயம் – 2 டீஸ்பூன்
ஆப்பிள் சைடர் வினிகர் – 1 கப்
நீர் – 1 கப்
செய்முறை:
ஊற வைத்த வெந்தயத்தை பேஸ்ட் செய்து அதனுடன் ஆப்பிள் சைடர் வினிகர், நீர் கலந்து தலையில் தேய்க்கவும். முடியின் வேர்க்கால்கலில் படும்படி மசாஜ்  செய்து 30 நிமிடங்கள் கழித்து தலை முடியை அலசவும். இது பொடுகை போக்கி மிகவும் நல்ல நிவாரணம் தரும்.
2. வேப்பிலை தெரபி செய்ய
தேவையானவை:
வேப்பிலை ஜூஸ் – 1/2 கப்
பீட்ரூட் – 1/4 கப்
தேங்காய் பால் – 1/4 கப்
தேங்காய் என்ணெய் – 1 ஸ்பூன்
செய்முறை:
மேற்கண்ட எல்லாவற்றையும் கலந்து தலைமுடியில் தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்தால் செம்பட்டை, முடி வறட்சி, பொடுகு எல்லாம் மறைந்து ஆரோக்கியமான பளபளப்புடன் கூந்தல் இருப்பதை காண்பீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here