பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் குறைவு

0
2299
இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், மணவ மாணவிகளின் தேர்ச்சி விகிதம் பற்றிய தகவலை வெளியிட்டார். அதன் விவரங்கள் வருமாறு:-
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 91.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டை விட தேர்ச்சி விகிதம் ஒரு சதவிதம் குறைந்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக இயற்பியல் பாடத்தில் 96.4% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வேதியியல்-95%, உயிரியல்-96.3%, கணிதம்-96.1% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தாவரவியல்-93.9%, விலங்கியல்-91.9%, கணினி அறிவியல்-96.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல்-90.3%, கணக்குப்பதிவியல்-91% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
71,368 மாணவ,மாணவிகள் 1001 முதல் 1100 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்
1,07,266 மாணவ,மாணவிகள் 901-1000 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்
1,65,425 மாணவ,மாணவிகள் 701 முதல் 800 மதிப்பெண்கள் வரை பெற்றுள்ளனர்
1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் – 231
1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 4847
1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 8510
1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 11739
1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 71,368
901 முதல்  1000 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 1,07,266
801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 1,43,110
701 முதல் 800 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 1,65,425
700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் – 3,47,938

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here