பரபரப்பான சூழலில் பெங்களூரு சிறையில் சசிகலாவை நாளை சந்திக்கிறார் டிடிவி தினகரன்!

0
2524

சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை நாளை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளார்.
அதிமுகவின் அதிகார மையம் யார் என்பத தொடர்பான பிரச்சனையால் தமிழக அரசியலில் மீண்டும் அனல் பறக்க தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிமுக தலைமை கழகத்துக்கு வருமாறு டிடிவி தினகரன் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதைத்தொடர்ந்து ஓபிஎஸ் அணி இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் நாளை சசிகலாவை சந்திக்கவுள்ளார்.
அப்போது கட்சியையும் ஆட்சியையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here