கலசபாக்கத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கலசபாக்கம் ஒன்றியத்தை சேர்ந்த 9 பயனாளிகளுக்கு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஆணைகள் மற்றும் 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள் ஆகியவற்றை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. துணை செயலாளர் என்.துரை, மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, ஒன்றிய செயலாளர் எம்.திருநாவுக்கரசு, பொதுக் குழு உறுப்பினர் பொய்யாமொழி, திருவண்ணாமலை நகர செயலாளர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.