சென்னை: சமையல் போட்டிக்கு நடுவராக போட்டதுமே ஜூலி கெத்து காட்டுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி துவக்கத்தில் இருந்தே சண்டை, அழுகையை வைத்து தான் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸும் என்னென்னவோ செய்தாலும் டிஆர்பியில் அவரால் ஒரு குறிப்பிட்ட சேனலின் நிகழ்ச்சிகளை அடித்துக் கொள்ள முடியவில்லை. இந்நிலையில் புதிய ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது
ஜூலிஇரு அணி சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு தீர்ப்பு சொல்வதற்குள் ஜூலி ஓவர் சீன் போடுகிறார். அவராக சீன் போடவில்லை பிக் பாஸ் சொல்லிக் கொடுத்து தான்.
காயத்ரி
காயத்ரி
அது என்ன நடுவர் என்று சொன்னதுமே தலைக்கனம், கொம்பு முளைக்கிறது உனக்கு என காயத்ரி ஜூலியிடம் கேட்கிறார். ஜூலி அழுததை பார்த்துப் பார்த்து பார்வையாளர்களுக்கு போர் அடித்துவிட்டதால் பிக் பாஸ் அவரை இன்று அழச் சொல்லவில்லை.
தலைவர்
அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவர் பதவிக்கு போட்டியிட ஜூலி விரும்புகிறார். அவர் தலைவராக வந்தால் பரபரப்புக்கு நிச்சயம் பஞ்சமே இருக்காது. இது தானே உங்களுக்கு வேண்டும் பிக் பாஸ்