சென்னை: பிக்பாஸ் வீட்டின் புதிய உறுப்பினராக நடிகை பிந்து மாதவி என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை வைத்து கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.
வாரா வாரம் ஒரு போட்டியாளர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார். இதனால் 100 நாட்கள் வரை நிகழ்ச்சியை கொண்டு போக முடியுமா என்ற சந்தேகம் எழுந்ததாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
இதன்காரணமாகவே இந்த வாரம் எலிமினேஷனும் இல்லை எனக்கூறப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்தின் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
பல்லக்கில் வந்த பிந்து
பல்லக்கில் பிக்பாஸ் வீட்டிற்கு தூக்கி வரப்பட்ட அவரை சக போட்டியாளர்கள் வரவேற்றனர். இந்நிலையில் பிந்துமாதவியை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டுள்ளனர். அவற்றில் சில..
நயன்தாரேவே வந்தாலும்
சாரே நயன்தாரேவே வந்தாலும் எங்க ஓவியாவ விட்டுக்கொடுக்க மாட்டோம் சாரே.. என்கிறது இந்த மீம்