தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிப்படி ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது!

0
3685

சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்து விட்டதால் இனி ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் உள்ளவர்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்காமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. இதன்படி யார் யாருக்கெல்லாம் ரேஷன் பொருள்களும், ரேஷன் கார்டுகளு்ம கிடையாது என்பது குறித்து அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

விதிகள் விவரம்:

  • வருமான வரி செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பங்கள்.
  • தொழில் வரி செலுத்துபவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
  • ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வருமானம் இருந்தால் ரேஷன் கார்டு கிடையாது.
  • மத்திய/ மாநில உள்ளாட்சி அமைப்புகள்/ மாநகராட்சிகள்/ மத்திய/ மாநில தன்னாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் மற்றும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை உறுப்பினர்களாக கொண்ட குடும்பங்கள்.
  • பல்வேறு சட்டங்களின் கீழ் வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படும் குடும்பங்கள்
  • நான்கு சக்கர வாகனத்தை வைத்துள்ள குடும்பங்கள் (ஒரு நான்கு சக்கர வாகனத்தை வணிக பயன்பாட்டிற்காக தினசரி வாழ்வாதாரத்துக்கு வைத்துள்ள குடும்பத்தினர் நீங்கலாக)
  • ஏசி, பிரிட்ஜ், 3 அறை கொண்ட வீடு ஆகியன இருந்தாலும் பொருள்கள் வழங்கப்படமாட்டாது
  • 5 ஏக்கருக்கு மேல் நில வைத்திருந்தால் ரேஷன் பொருள்கள் வழங்கப்படாது.

இருப்பினும் இந்த விதிகள் உடனடியாக தமிழகத்துக்கு பொருந்தாது என அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார். அதேநேரத்தில் விரைவிலேயே இதை தமிழக அரசு அமல்படுத்தவே செய்யும் என்றே கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here