மதுரை: தமிழகத்திற்கு இப்போது நல்ல தலைவர்கள் இல்லை. இதனால்தான் நானெல்லாம் அரசியல் பேசக் காரணம் என்று இயக்குநர் அமீர் வேதனையுடன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார் அமீர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்றால் அவர்களின் படிப்பு என்னாகும். மாநிலத்தில் போரட்டம் நடத்த வேண்டும் என்பது தேவையற்றது.
மக்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. ஆனால் இப்போது நடக்கும் அரசு என்பது அப்படியில்லை. முதலில் ஜெயலிதா மருத்துவமனை அனுமதியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஏகப்பட்ட பிரச்சினைகள். முதல்வர் பதவிக்கு, பொதுச் செயலளார் பதவிக்கு சண்டை. மற்றும் பல்வேறு பிரச்சனைகள். தமிழகத்திற்கு நிரந்தர கவர்னர் ஏன் அமைக்கவில்லை. இதற்குப் பதிலே இல்லை.
நீட் தேர்வை கடுமையாக எதிர்த்த ஜெயலலிதா இப்போது இல்லை. ஆகையால் கடுமையான தலைவர்கள் இல்லை. நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவே இல்லை. நீட் தேர்வில் ஆடை கட்டுப்பாடுகள் எல்லாம் முறையற்றது. திணிக்கிறார்கள் நீட்டை. திரைப்பட தொழிலாளர்களாக இருந்தும் அரசியல் பேச காரணம் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமையும். தலைவர்களும் இல்லை என்பதால்தான் என்றார் அமீர்.