திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மோகன்ராஜ் (பொறுப்பு) தலைமை வகித்தார். இதில், 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, ஆட்கள் தேர்வு நடத்தியது. 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 157 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.