கோடைக் காலத்திற்கு ஏற்றது எளிய உணவுதான். அதிலும் சைவ உணவு அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் அது சூட்டைக் கிளப்பி விடும்.
அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதல் தோன்றி உணவுப் பொருளை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுவது உண்டு. இந்த உணவை உண்ணும்போது வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும். இதனால் கோடைக் காலங்களில் இம்மாதிரியான உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது. மிகுந்த கார உணவுகளையும் எண்ணெயில் வதக்கிய உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. இவை சருமத்திற்குத் தொல்லை தரும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும். வெயில் காலத்தில், கேழ்வரகைக் குறைத்து கம்பு தானியத்தை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கீரைகள் நல்லது உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது. நீராகாரம் காலையில் நீராகாரம் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும். Read more at: https://tamil.boldsky.com/health/tips/2011/3-food-health-summer-food-idea-aid0091.html
Read more at: https://tamil.boldsky.com/health/tips/2011/3-food-health-summer-food-idea-aid0091.html