குழந்தைகள் அழும்போது வாயில் இப்படி நிப்பிளை வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

0
5075

குழந்தைகளுக்கு நிப்பிள் பயன்படுத்துவது சரியா தவறா? நிப்பிள் பயன்படுத்துவதன் நன்மைகளையும் தீமைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்

புதிதாக தாய்மை அடைந்திருக்கும் தாய்மார்களுக்கு குழந்தைக்கு நிப்பிள் பயன்படுத்துவது சரியா தவறா என்பது ஒரு குழப்பமாக உள்ளது. பலர் குழந்தையின் அழுகையை நிறுத்த நிப்பிள் பயன்படுத்துகின்றனர். அல்லது விரல் சப்புவதைத் தடுக்க நிப்பிள் பயன்படுத்துகின்றனர்.

குழந்தைகள் முழுமையாக நிப்பிளுக்கு அடிமையாவதற்கு முன்னர் அதனை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை மற்றும் தீமை பற்றி அறிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மேலும் உங்கள் குழந்தைக்கு இது ஏற்புடையதாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொண்டு பயன்படுத்துங்கள். தொடர்ந்து இந்த பதிவைப் படித்து நிப்பிள் பயன்பாட்டின் நன்மை தீமைகளை அறிந்து கொள்ளுங்கள்

நன்மைகள் நிப்பிள் பயன்படுத்துவதால் பல குழந்தைகளுக்கு ஒரு மன நிறைவு உண்டாகிறது. அவர்கள் சுலபமாக சந்தோஷமாக உணர்கின்றனர். சில குழந்தைகளுக்கு வேறு எந்த ஒரு பொருளும் இத்தகைய இன்பத்தை வழங்குவதில்லை. அதன் சில நன்மைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. எளிதில் அப்புறப்படுத்தக் கூடியது. நிப்பிள் பயன்பாட்டை குழந்தை நிறுத்த வேண்டும் என்று பெற்றோர் நினைத்தால் உடனடியாக அதனை தூக்கி எறிந்து விடலாம். நிப்பிளை வாயில் வைப்பதால் மிக எளிதில் குழந்தை சமாதானமாகி விடும். குழந்தையை தூங்க வைக்க உதவும். இது திடீர் குழந்தை இறப்பு நோய்க்குறியின் ஆபத்தை குறைக்கலாம். விமான பயணத்தின்போது உண்டாகும் அசௌகரியத்தைக் கையாளுவதை எளிதாக்கலாம். விமானம் புறப்படும்போது உண்டாகும் காது வலியைக் கையாள குழந்தைக்கு தெரியாத போது அவர்கள் நிப்பிள் பயன்படுத்துவதால் அவர்களின் கவனத்தில் வலி பற்றிய சிந்தனை இருக்காது. தற்காலிக கவனச்சிதறலை உண்டாக்கும், குறிப்பாக ஊசி போடும்போது அல்லது இரத்த பரிசோதனையின்போது.. குழந்தை விரல் சப்புவதை நிறுத்த முடியும்.

தீமைகள்

நிப்பிள் அறிமுகத்தால் தாய்பால் குடிப்பதில் தடை உண்டாகலாம். பார்ப்பதற்கு இரண்டும் ஒரே விதமாக இருந்தாலும் நிப்பிள் மற்றும் தாய்ப்பால் உறிஞ்சுதலில் வேறுபாடு உண்டு. மேலும் இந்த வேறுபாட்டை குழந்தைகள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். மத்திய காது பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் பற்கள் தொடர்பான கோளாறுகள் தோன்றலாம். இரண்டு வருடங்களுக்கு மேல் நிப்பிள் பயன்படுத்துவதால் பல்வரிசை நேர்த்தியாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் உண்டு, நீண்ட காலம் நிப்பிள் பயன்படுத்துவதால் குழந்தை தாய்ப்பாலை மறப்பது கடினமாக இருக்கலாம். அந்த தருணத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here