திருவண்ணாமலை மாவட்டத்தில் பல தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகிறது. தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். பெற்றோர்களிடம் அதிகமாக வசூல் செய்வதை தடுக்க வரும் கல்வியாண்டு முதல் வங்கிகள் மூலமே கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். இதனை பள்ளிகளும் வங்கி மூலமே வசூல் செய்ய வேண்டும். இதனை கடைபிடிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மேலும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை அவர்களது வங்கிக்கணக்கிற்கே செலுத்த வேண்டும். திருவண்ணாமலை நகரில் ஒரு தனியார் பள்ளி பல்வேறு இடங்களில் கல்வி கட்டணம் குறித்து விளம்பர பேனர்களை வைத்துள்ளது. அதில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூல் செய்வதாக அதில் குறிப்பிட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே இது குறித்து அப்பள்ளிக்கு உடனடியாக நோட்டீஸ் இன்று (நேற்று) வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அதற்கான விளக்கம் அளிக்கவில்லை எனில் அந்த பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.