கமலிடம் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது: ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

0
3324

கோவை: நடிகர் கமல் விவகாரத்தில் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அந்த அணியினர் மாவட்டவாரியாக கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது நடிகர் கமலின் விமர்சனத்தை அமைச்சர்கள் அவரை அச்சுறுத்தும் வகையில் விவாதமாக்கியதாக அவர் குற்றம்சாட்டினார். அமைச்சர்களின் இந்த நடவடிக்கை மக்களை முகம் சுளிக்க வைத்து விட்டதாகவும் அவர் சாடினார்.

எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ.,வும் மக்கள் ஆட்சி நடத்தினர். அவர்கள் மக்கள் விரோத திட்டங்களை, இதுவரை நடைமுறை படுத்தியதில்லை என்றும் அவர் கூறனார். இன்று, ஆட்சியில் இருப்பவர்கள் ஜெயலலிதாவின் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் மறந்து செயல்படுகின்றனர் என்றும் ஓபிஎஸ் சாடினார்.

ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் காலம் வெகுதுாரத்தில் இல்லை என்றார். அந்தக் காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்றும் ஓபிஎஸ் கூறினார். மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் ஸ்டாலின் பல்வேறு டிராமாக்களை நடத்தி வருவதாகவும் அவர் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here