உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது

0
1842

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. நேற்று, மூன்றாம் நாள் விழாவில், உலக நன்மை வேண்டி, 1,008 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. இதையொட்டி, அருணாசலேசுவரர் மூல கருவறை எதிரில், சிறப்பு யாகசாலை அமைத்து, 1,008 சங்குகளை வைத்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின், புனித நீரை கொண்டு, அருணாசலேசுவரருக்கு உச்சி கால பூஜையில், சிறப்பு அபி?ஷகம் செய்யப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here