உற்சாகமூட்டும் சத்து பானங்கள் இதயத்தை பாதிக்குமா?

0
6459

குழந்தைகளுக்காக இன்று பல எனர்ஜி பானங்கள் டப்பாக்களில் அடைத்து விற்கப்படுகின்றனர். ஜிம்மின் ஒர்க் அவுட் செய்வோருக்காக பிரத்யேகமாக பல பானங்கள் இன்று வந்து விட்டன. அமெரிக்க பானமாகிய ரெட் புட்மீது முன்னதாக ஓர் சர்ச்சை எழுந்தது. இந்த எனர்ஜி பானங்கள் இதய ரத்த நாளங்களை பாதிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் இதில் உள்ள கார்பன், அதீத சர்க்கரை பசி இல்லாமல் வயிற்றை மந்தம் ஆக்குகின்றன.

“சூப்பர் மார்க்கெட்டுகளில், பல வகையான சத்து பான டப்பாக்கள் அடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். எல்லா டப்பாக்களிலும் பல்வேறு வகையான சத்துகள் இருப்பதாக அச்சிடப்பட்டிருக்கும். பெரும்பாலான பானங்களில் மால்ட், சர்க்கரை, பால் பவுடர், சிறிய அளவு குளுக்கோஸ் இவைதான் முக்கிய மூலப்பொருட்களாக இருக்கும்.

சுவைக்காக சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி போன்ற செயற்கை சுவையூட்டிகளை சேர்க்கிறார்கள். மால்ட்டும் சர்க்கரையும் அதிகம் உள்ள இவ்வகை பானங்களை குடிக்கும் சிறுவர்களுக்கு பசியுணர்வு பாதிக்கப்படும். இயற்கையான உணவுகளை சாப்பிட பிடிக்காமல் போய்விடும். இயற்கையான காய்கறிகளில், கனிகளில் இல்லாத சத்துகளா இந்த டப்பா பவுடரை குடிப்பதால் வந்துவிட போகிறது?

பெற்றோர் தம் குழந்தைகள் உடனடியாக வளர வேண்டும் என்று எதிர்பார்ப்பதே தவறு. சத்து பானங்கள் அனைத்தும் இயற்கையான உணவுப்பொருட்களில் இருந்து எசென்ஸாக எடுக்கப்பட்டு, தயாராகி, பதப்படுத்தப்பட்டு, நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு சில வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்டுதான், டின்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. கடைகளில் சில மாதங்கள் வைக்கப்பட்ட பிறகே அதை ஒருவர் வாங்கிப் பயன்படுத்துகிறார்.

இத்தனை மாதங்கள் கழித்து பயன்படுத்தும் சத்துபான பவுடர்கள் பெரிய நன்மையை செய்துவிடப்போவதில்லை என்பதே நிதர்சனம். இயற்கையான உணவுகளை சாப்பிடும் போது வாயில் சுரக்கும் உமிழ்நீரில் இருந்து உணவு குடலுக்குள் சென்று செரிமானம் அடைவது வரை பல்வேறு படிநிலைகள் உள்ளன.

இவ்வாறு இயல்பான செரிமானத்தின் மூலம் கிடைக்கும் சத்துகளே உடலுக்கு நல்லது செய்யும். சத்து பானங்கள் மூலம் பெறப்படுகிற சத்துகள் உடலில் கொழுப்பாக தங்கி சிறுவர்களுக்கு எளிதாக பருமன் பிரச்னையை ஏற்படுத்திவிடும்.

வளர்சிதை மாற்றத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். சத்து பானங்களால் கிடைக்கும் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் கல்லீரலில் சேர்ந்து `ஹைபர்வைட்டமினோசிஸ்’ நோயை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு 2-3 முறை சத்து பானத்தை குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை, பசியின்மை, செரித்தல் கோளாறு போன்ற பிரச்னைகள் வரும்.

இதுபோன்ற பானங்களை சிறுவர்கள் அருந்துவதால் உடலில் அளவுக்கு அதிகமாக சேரும் கால்சியமானது சிறுநீரகங்களில் கற்களையும் உருவாக்கிவிடுகிறது. வளர்ச்சி ஹார்மோன்களை தூண்டி வயதுக்கு அதிகமான வளர்ச்சியையும் பருமனையும் ஏற்படுத்திவிடும்.

வைட்டமின்கள் அதிகம் இருக்கிறது என ஒரு பானம், புரதச் சத்து கிடைக்கும் என ஒரு பானம், தாதுச்சத்து அதிகம் என ஒரு பானம் என்று சிறுவர்களுக்கு கொடுத்துக்கொண்டே போனால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்.

அதனால் சத்தான வீட்டு உணவுக்கு மாற்று வேறெதுவும் இல்லை. சிலர் இரவில் குழந்தை சரியாக சாப்பிடவில்லை என இதுபோன்ற பானங்களை தூங்கப்போகும் முன் குடிக்கக் கொடுப்பார்கள். இது மிகவும் தவறான பழக்கம். குழந்தைகளின் பற்களை பாதிக்கும். அஜீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும். சத்துபானங்கள் மட்டுமின்றி, துரித உணவுகள், ஜங் உணவுகள் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருப்பதுதான் ஆரோக்கியமானது.

பள்ளிக்கு போகும் போது லஞ்ச் பாக்ஸில் காய்கறிகள், பழங்கள் கொடுத்தனுப்புங்கள். ஒவ்வொரு வேளை உணவுக்கும் இடையே குறைந்தது 4 மணி நேரம் இடைவேளை இருப்பது அவசியம். உங்கள் வீட்டுக்கு விருந்துக்கு வரும் உறவினருக்கு எவ்வளவு வகை உணவை கொடுக்கிறீர்கள். அதே போல உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் கொடுத்தால் போதும்… சத்து பானங்கள் தேவையே இல்லை!’’

சத்து பானங்களால்கிடைக்கும் தேவைக்கு அதிகமான வைட்டமின்கள் கல்லீரலில் சேர்ந்து `ஹைபர்வைட்டமினோசிஸ்’ நோயை ஏற்படுத்திவிடும். ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை சத்துபானத்தை குடிக்கும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல், சிறுநீர் சரியாக வெளியேறாத நிலை, பசியின்மை, உணவு செரித்தலில் கோளாறு போன்றபிரச்னைகள் வரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here