உடல் எடை குறைப்பில் பயன்படும் கொள்ளு…!

0
3178
அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும் இதிலுள்ள புரதம் உதவுகிறது.
கொள்ளுவை நம் அன்ராட உனவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையைக் குறைக்க உதவும். முதல் நாள் இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து  தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் விரைவில் உடல் எடை குறையும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.
இதனை வேகவைத்து, அந்த நீரை குடித்து வந்தால் சளி குணமாகும். ரசமாக வைத்து சாப்பிட்டால், உடல் வலி, ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்னைகள் சரியாகும. சுவாசத் தொந்தரவு நீங்கும் காய்ச்சலையும் குணமாக்கும்.
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தேவையான ஊட்டச்சத்துகளும் இதில் நிறைந்துள்ளன. இது, உடல் உறுப்புகளை பலம் பெற வைக்கும். நோய் பாதிப்பிலிருந்து காப்பாற்றும். எலும்புக்கும் நரம்புக்கும் வலுசேர்க்கும். இதை அரிசியுடன் சேர்த்துக் காய்ச்சி, கஞ்சியாக உட்கொள்ளலாம். இதனால், பசியின்மை  நீங்கும். உடல் வலுவாகும்.
கொள்ளு ஆன்டி-ஹைப்பர்கிளைசெமிக் உணவு வகையை சேர்ந்தது. எனவே, இது சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்தது. கொள்ளை ஊற வைத்து ஆட்டி பால் எடுத்து அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும். கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால், ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here