திருவண்ணாமலை: அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு, எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட, உயர் மருத்துவ கல்வியில் வழங்கி வந்த, 50 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரியும், திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, டாக்டர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். இதில், டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.