அரசியல் கட்சி தொடங்குவது உறுதி… நவ. 7ல் அறிவிக்க மாட்டேன் – கமல்ஹாசன்

0
4131

சென்னை: ரசிகர்கள் மத்தியில் பேசிய கமல், தான் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்று கூறியுள்ளார். ஆனால் அதனை நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் இன்று தனது ரசிகர்களை சந்தித்தார் கமல், அப்போது அவர், ஆர்வக்கோளாறில் பதவிக்காக வந்துவிட்டதாக நினைக்காதீர்கள் என்றார்.

ஏழைகளும் பணக்காரர்களும் கடந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏழைகளுக்கும் அதே நிலை தான், பணக்காரர்களுக்கும் அதே நிலைதான். 2015-ஆம் ஆண்டு வெள்ளத்தின்போது ரசிகர்கள் அளித்த நிவாரணத்தை ஆட்சியாளர்கள் பறித்து விட்டனர் என்று கூறினார். மற்றவர்கள் கொடுத்த நிவாரணத்தில் ஸ்டிக்கர் ஒட்டியது பிச்சையை விட கேவலம் என்றும் கடும் காட்டமாக கண்டித்தார். கொற்கையில் சுனாமி வந்ததால் பாண்டியர் தலைநகர் மதுரைக்கு போனது. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். எப்போதும் அழிவு வரும்வரை காத்திருக்க வேண்டியது இல்லை என்றார். திருட்டுத்தனம் செய்பவர்கள் பெரியவர்கள் போல் நடப்பதை தாங்க முடியவில்லை.

அடிக்கடி தட்டி பார்க்க நான் ஒன்றும் மிருதங்கம் அல்ல என்றும் கூறினார். தனது தந்தையை இறந்தது முதல் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடுவதை தவிர்த்து வருவதாகவும் கூறினார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அதே நேரத்தில் அதனை நவம்பர் 7ஆம் தேதி அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறினார். புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்த கமல், ரசிகர்களிடம் வாங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க இந்த செயலி பயன்படும் என்று கூறினார். குழந்தை பிறக்க 10 மாதம் ஆகும் எனவே அரசியல் கட்சி தொடங்க சில மாதங்கள் தேவைப்படும் என்றும் கமல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here