அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை… மழை தொடரும்?

0
2765

சென்னை: அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குமரிக்கு தென்கிழக்கே கடலில் 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அந்தமான் தீவுகள் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று உருவானது. தற்போது இது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் பட்சத்தில் தமிழ்நாட்டில் மழை தொடர வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here