இந்த வயிறு தான் – எத்தனை அதிஷ்டசாலி!

0
313

பசி எனக்கு –
அகோர
பசி எனக்கு,
அன்னமாகாரமில்லை,
பத்து நாளா
குடிக்கக் கூட
ஏதுமில்லை.
காலு ஓடுது,
கண்ணு தேடுது,
கண்ணு மட்டுமா –
கண்ணோட சேர்ந்து
மனசும் தேடுது.
வயிறு நோகுது
வயிறோட சேர்ந்து –
எல்லாம் நோகுது.
எத்தனை அதிஷ்டசாலி !
இந்த வயிறு தான் –
எத்தனை அதிஷ்டசாலி!
நாசி முகர,
புத்தி சொல்ல,
மனசு துடிக்க,
காலு ஓட,
கை எடுக்க,
நா ருசிக்க ,
இந்த அத்தனையும்
வயிற குளிர வைக்க!!!
எத்தனை அதிஷ்சாலி !
இந்த வயிறு தான் –
எத்தனை அதிஷ்டசாலி !
அத்தனை
உறுப்புக்களும்
இந்த ஒரு சான்
வயிற்றுக்காக –
ஒரு சேர!!!
சொல்லுது,
இந்த புத்தியும் மனசும்
ஒன்னா சேர்ந்து
சொல்லுது,
என்னை வயிறு -ஆக !
பார்க்குது
எட்டிப் பார்க்குது,
ஆசையோடு பேராசையும்
ஒன்னா சேர்ந்து
எட்டிப் பார்க்குது,
நான் வயிறு – ஆக !
எத்தனை இன்பம் !
எனக்காக,
அத்தனையும்
எனக்காக!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here