முதல்-அமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் கூறியதாவது:-
அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருபவர்களை தமிழக அரசு மனதார பாராட்டுகிறது. கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம், சிறப்பூதியமாக வழங்கப்படும்.
கொரோனா பரவாமல் தடுக்க தமிழக மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கொரோனா விவகாரத்தில் மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம் என முதல்-அமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.