விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணமுடிகிறது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி கல்லூரி காலத்தில் பழகிய நண்பர்களின் நினைவுகள் எல்லாம் தற்போது தன்னிடம் பகிர்ந்து கொண்டதாகவும் மீண்டும் அதே போல நண்பர்களோடு சேர்ந்து மகிச்சியாக இருக்க அவர் விரும்புவதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயகாந்த்திற்கு நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய் இருந்துள்ளது என்று தெரிவித்த மருத்துவர் அதை ஆரம்பத்தில் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். அமெரிக்கா சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று வந்தனர். ஆனால் அவருக்கு நரம்பு ரீதியான பிரச்சனையை சரி செய்ய முடியவில்லை.
அதை தற்போது அக்குபஞ்சர் முறையில் சரி செய்து வருவதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.
கடந்த 20 நாட்களாக அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இன்னும் ஒரு அறுபது நாள் சிகிச்சை மட்டும்தான் இருக்கிறது என்று தெரிவித்த மருத்துவர், சரியாக மூன்று மாதத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறேன் என்றும் தெரிவித்தார்.அதே போல தற்போது அவருக்கு 45 சதவீதம் அளவிற்கு உடல் நிலை சார்ந்த பிரச்சனைகள் சரியாகி விட்டதால் நீங்கள் எதிர்பார்த்ததை போல சிறுத்தையாக வேங்கையாக விஜயகாந்த் வெளியே வருவார் என மருத்துவர் சங்கர் தெரிவித்தார்.
இப்பொழுது விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது என்றும், தற்பொழுது விஜயகாந்த் தெம்பாகவும் வலிமையாகவும் இருக்கிறார். கொரோனோவில் இருந்து பத்திரமாக இருக்க வேண்டும் என அனைவருக்கும் ஆலோசனை வழங்குகிறார்.
விஜயகாந்த் அவருக்கு வழங்கப்பட்டு வரும் மற்ற சிகிச்சை முறைகள் சிறிது சிறிதாக குறைத்து விட்டோம் என்று தெரிவித்த மருத்துவர் தற்பொழுது அக்குபஞ்சர் மருத்துவ முறை மட்டுமே எடுக்கப்படுகிறது. மருந்து இல்லாத மருத்துவமுறை இதன் மூலம் முழுமையாக விஜயகாந்த் குணமடைவர் என்கிறார் மருத்துவர் சங்கர்.