திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத, 453 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமாக, திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னையிலும் கடைகள், கட்டடங்கள், நிலங்கள் உள்ளன. திருவண்ணாமலையில், 173 கடைகள், சென்னை ராயப்பேட்டை, அடையாறு பகுதியில், 280 கடைகள் என மொத்தம், 453 கடைகளை வாடகைக்கு எடுத்த கடைக்காரர்கள், வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். நிலுவை பாக்கியை வசூல் செய்ய, உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், 453 கடைகளின் உரிமையாளர்களுக்கும் வரும், 25க்குள் வாடகை பாக்கி செலுத்த வேண்டும் என, கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் இணை ஆணையர் ஜெகன்நாதன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.