ராக்கெட் வேகத்தில் முட்டை விலை: கொள்முதல் ரூ.5.16 ஆக அதிகரிப்பு

0
4672

முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முட்டையின் தேவை அதிகரிப்பால் தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது. முட்டை விலை ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்துள்ளது இதுவே முதல் முறை. இதனால் சில்லறை விலையில் விற்கப்படும் முட்டை விலை ரூ.6.50 வரை அதிகரிக்கும் என தகவல்.

தமிழகம் முழுதும் முட்டை விலை எட்டமுடியாத உயரத்துக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. 4.36 பைசாவாக இருந்த போது மிகப்பெரிய விலை உயர்வாக முட்டை விலை உயர்வை அனைவரும் பார்த்த நிலையில் ரூ.4.41-க்கு திடீரென உயர்ந்தது. அப்போது சில்லறை விலை ரூ.5 ஆக அதிகரித்தது. பின்னர் மீண்டும் ஓரிரு நாளில் 9 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.4.50 ஆக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு திடீரென முட்டை கொள்முதல் விலையில் மேலும் 24 பைசாவை கூட்டி ரூ.4.74 என அறிவித்தது.

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் கூடி முட்டை விலையை நிர்ணயம் செய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக முட்டை விலை உயர்ந்து வருகிறது. ரூ.4.36 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை கடந்த 6-ந்தேதி ரூ.441 என உச்சத்தை தொட்டது. இதனை தொடர்ந்து கடந்த 9-ந்தேதி மேலும் 9 காசுகள் உயர்த்தப்பட்டது. இதனால் முட்டை விலை ரூ.4.50 யை தொட்டது.

ரூ.4.50 காசுகள் எட்டி இருந்த நிலையில் முட்டை கொள்முதல் விலை நேற்று முன்தினம் ரூ.4.74 காசுகளாக உயர்ந்தது. இதனால் போக்குவரத்து, சிறுவணிகர்கள் லாபம் என சில்லறை விலையில் முட்டை விலை சில இடங்களில் ரூ.6-00-க்கும் சில இடங்களில் ரூ.6-50-க்கும் விற்கப்பட்டது.

முட்டையின் தேவை அதிகரிப்பும், உற்பத்தியில் குறைவுமே இந்த கடும் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் முட்டை விலை குறையும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் வரலாறு காணாத வகையில் இன்று ஒரே நாளில் 42 காசுகள் அதிகரித்து முட்டை கொள்முதல் விலை ரூ.5.16 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று நாமக்கல்லில் கூடிய தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் வெளிச்சந்தை விலை அதிகாரிக்கும். இதன் விலைவு சில்லறை விலையில் ரூ.6-50 வரை முட்டையின் விலை உயரும். இதற்கு காரணம் தினமும் தமிழ்நாட்டில் உற்பத்தி இலக்கான 3 கோடி முட்டைகள் என்பதில் 20 சதவீதம் வரை உற்பத்தி குறைவு ஏற்பட்டுள்ளதும், வடமாநிலங்களில் முட்டையின் தேவை அதிகரித்திருப்பதும் என்கின்றனர்.

தமிழகத்தில் சாதாரண ஏழை மக்களுக்கு எளிதாக குறைந்த விலையில் கிடைத்து வந்த சத்துப்பொருளின் விலையும் உச்சத்துக்கு சென்றுள்ளது. ஐயப்பனுக்கு மாலை போடும் சீசன் தொடங்கினால் முட்டையின் பயன்பாடு குறைந்துவிடும் என்பதால் உச்சத்துக்கு சென்ற முட்டையின் விலை அடுத்து வரும் நாட்களில் குறைய வாய்ப்புள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மத்திய மாநில அரசுகளின் அலட்சியமே காரணம், முட்டை விலை உயர்வுக்கு பின்னால் ஏதோ சதி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here