நிரம்பி வழியும் சாத்தனூர் அணை: குவியும் சுற்றுலாப் பயணிகள்

0
3198

சாத்தனூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில், ஒரு வாரமாக நிரம்பி வழிவதால் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சாத்தனூர் அணை கட்டப்பட்டுள்ளது.
இந்த அணைக்கு அண்மையில் பெய்த தொடர் மழையாலும், கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீராலும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், சாத்தனூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்மட்டத்தின் உயரம் 119 அடியாகும்.
அணையின் மொத்த நீர் கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, அணையின் நீர்வரத்து விநாடிக்கு 100 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 107 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
கடந்த ஒரு வாரமாகவே அணை நிரம்பி வழிவதால், அணையின் அழகைப் பார்க்க சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here