நாட்டு மக்களிடம் இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

0
415

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 23 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். ஏற்கனவே, கடந்த 19 ஆம் தேதி நாட்டு மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வலியுறுத்தி இருந்தார். 
முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மக்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. அரசின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில்லை என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்து இருந்தார். இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here