சென்னை: விஜய் நடித்து வரும் அவரது 62வது படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக்கும் ஜூன் 21ம் தேதி அதாவது அவரது பிறந்த நாளுக்கு முதல் நாள் வெளியிடப்படும் என படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
விஜய் பிறந்த நாளை தடபுடலாக கொண்டாடக் காத்திருக்கும் அவரது ரசிகர்களுக்கு காதில் தேனூற்றுவது போல வந்துள்ளது இந்த செய்தி.
விஜய்யின் 62வது படம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கீர்த்தி சுரேஷுடன், விஜய் தரையில் அமர்ந்திருக்கும் படம் பெரும் ஆர்வத்தைத் தூண்டி விட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் படத்தின் பெயரும், பர்ஸ்ட் லுக்கும் 21ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 22ம் தேதி விஜய் பிறந்த நாள். எனவே முதல் நாளே பிறந்த நாள் பரிசாக படப் பெயரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிக்கவுள்ளது. இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது.