SSLC-Plus1-and-Plus2-classesPublic-Exam-Schedule

0
67
Exam-Schedule

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எதிர்கொள்வதற்கு வசதியாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த ஏதுவாகவும் பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் கால அட்டவணைகள் கடந்த சில ஆண்டுகளாக முன்கூட்டியே வெளியிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2019-2020-ம் கல்வி ஆண்டில் (இந்த ஆண்டு) பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவை குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது.
தேர்வு காலம்
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-2) வருகிற மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 24-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு முடிவு ஏப்ரல் 24-ந்தேதி வெளியாகும்.
* 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு (பிளஸ்-1) மார்ச் 4-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி நிறைவடைகிறது. இந்த தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது.
* 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு (எஸ்.எஸ்.எல்.சி.) மார்ச் 17-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந்தேதி முடிவு பெறுகிறது. தேர்வு முடிவு மே 4-ந்தேதி வெளியாகிறது.
பிளஸ்-2 தேர்வு
தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:-
2.3.20 (திங்கள்) – தமிழ்.
5.3.20(வியாழன்) – ஆங்கிலம்.
9.3.20(திங்கள்) – கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல்/ நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து- உணவு கட்டுப்பாடு / ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை/ விவசாய அறிவியல்/ நர்சிங்(பொது)/ நர்சிங்(தொழில் முறை).
12.3.20 (வியாழன்) – தொடர்பு ஆங்கிலம்(கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/ இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/ கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம்(தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்.
16.3.20-(திங்கள்)- இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்.
20.3.20-(வெள்ளி)- உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்.
24.3.20 (செவ்வாய்)- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்.
பிளஸ்-1 தேர்வு
4.3.20(புதன்)- தமிழ்.
6.3.20(வெள்ளி)- ஆங்கிலம்.
11.3.20(புதன்)- கணிதம்/ விலங்கியல்/ வணிகவியல்/ நுண் உயிரியியல்/ ஊட்டச்சத்து- உணவு கட்டுப்பாடு / ஜவுளி மற்றும் ஆடை அலங்காரம்/ உணவு மேலாண்மை / விவசாய அறிவியல்/ நர்சிங்(பொது)/ நர்சிங்(தொழில் முறை).
13.3.20(வெள்ளி)- தொடர்பு ஆங்கிலம் (கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்)/ இந்திய பண்பாடு மற்றும் கலாசாரம்/ கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேஷன்/ உயிரி வேதியியல்/ மேம்படுத்தப்பட்ட மொழி பாடம்(தமிழ்)/ மனை அறிவியல்/ அரசியல் அறிவியல்/ புள்ளியியல்.
18.3.20(புதன்)- இயற்பியல்/ பொருளாதாரம்/ கணினி தொழில்நுட்பம்.
23.3.20(திங்கள்)- உயிரியியல்/ தாவரவியல்/ வரலாறு/ வணிக கணிதம் மற்றும் புள்ளியியல்/ தொடக்கநிலை எலட்ரிக்கல் என்ஜினீயரிங்/ எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங்/ சிவில் என்ஜினீயரிங்/ ஆட்டோமொபைல் என்ஜினீயரிங்/ மெக்கானிக்கல் என்ஜினீயரிங்/ ஜவுளி தொழில்நுட்பம்/ அலுவலக மேலாண்மை மற்றும் செக்ரட்டரிஷிப்.
26.3.20 (வியாழன்)- வேதியியல்/ கணக்கு பதிவியல்/ புவியியல்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு
17.3.20(செவ்வாய்)- தமிழ் முதல் தாள்.
19.3.20(வியாழன்)- தமிழ் இரண்டாம் தாள்.
21.3.20(சனி)- விருப்ப பாடம்.
27.3.20(வெள்ளி)- ஆங்கிலம் முதல் தாள்
30.3.20(திங்கள்)- ஆங்கிலம் இரண்டாம் தாள்
2.4.20(வியாழன்)- கணிதம்.
7.4.20(செவ்வாய்)- அறிவியல்.
9.4.20(வியாழன்)- சமூக அறிவியல்.
இந்த தேர்வுகள் அனைத்தும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் காலை வேளையில் நடைபெறும். தேர்வு எழுதுவதற்கு 2 மணி நேரம் 30 நிமிடங்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here