தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்.. 8,37,317 மாணவர்கள் பங்கேற்பு.. மாஸ்க் அணிய அட்வைஸ்

0
75

 

தமிழகத்தில் பிளஸ் 2 எனப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கி வரும் 28 ம் தேதி வரை நடைபெற உள்ளது..

தற்போது பள்ளிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொதுதேர்வையும் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வி துறை தீவிரமான கவனத்தை செலுத்தியது.

நெறிமுறைகள்

அந்த வகையில், இன்று பிளஸ் 2 தேர்வுகள் மாநிலம் முழுவதும் நடக்க உள்ளன.. இன்று தொடங்கி வரும் 28 ம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற உள்ளது.. இதில், 3 லட்சத்து 98 ஆயிரத்து 321 மாணவர்களும், 4 லட்சத்து 38 ஆயிரத்து 996 மாணவிகளும் என மொத்தமாக 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 பேர், தேர்வுகளை எழுதுகின்றனர்… இதற்காக மொத்தம் 3,119 தேர்வு மையங்கள் தயார் நிலையில் இருக்கின்றன.. இன்றைய தேர்வினை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம், தேர்வு மையங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.

இடைவெளி

அதில், கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தேர்வு மையங்களில் முழுமையாக கடை பிடிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.. குறிப்பாக தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும், தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும், கிருமிநாசினி கொண்டு தேர்வறைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும், மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளுதல் கட்டாயம் வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

ஆள்மாறாட்டம்

பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் செல்போன் எடுத்துவர தடை விதிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், பொதுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தால், தேர்வு எழுத நிரந்தர தடைவிதிக்கப்படும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Tamil Nadu HSC Time Table 2022

Exam Dates Subjects
May 5, 2022 Language
May 9, 2022 English
May 11, 2022 Communicative English, Ethics and Indian Culture, Computer Science, Computer Applications, Bio-Chemistry, Advanced Language(Tamil), Home Science, Political Science, Statistics
May 13, 2022 Accountancy, Chemistry, Geography
May 17, 2022 Mathematics, Zoology, Commerce, Micro Biology, Nutrition and Dietetics, Textile & Dress Designing, Food Service Management, Agricultural Science, Nursing (General), Nursing Vocational
May 20, 2022 Economics, Computer Technology, Physics
May 23, 2022 Biology, Botany, History, Business Mathematics and Statistics, Basic Electrical Engineering, Basic Electronics Engineering, Basic Civil Engineering, Basic Automobile Engineering, Basic Mechanical Engineering, Textile Technology, Office Management and Secretary ship
May 28, 2022 Vocational Subjects

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here