அகோரனே கொரோனா..!

0
755
கொரோனா,
வுஹானில் தானே பிறந்தாய் நீ,
பெற்றவர் தானே பிள்ளையை வளர்க்க வேண்டும்
இது தானே உலக நீதி
ஆனால்,
நீ யார் அனுமதி பெற்று
இருநூற்றி பதிமூணு நாடுகளில் புகலிடம் கொண்டாய்?
என்ன வியப்பு,
சராசரியாக ஒரு மனிதனின் நடைவேகமான
4.5 கி மீ / மணியை எப்படி சமப்படுத்தினாய்?
உன் நாட்டிலிருந்து
3695 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
எம் நாட்டிற்கு
34 நாட்களில் நடந்தே வந்தாயோ?
வுஹானிலிருந்து
உசேன் போல்ட் வேகத்திலா வந்தாய்?
நடந்து தானே வந்தாய்,
பின்னர் ஏன்
அகோர பசி உனக்கு?
எத்தனை உயிர்கள்!
கும்பகர்ணனின் உறவுக்காரனடா நீ?
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்
ஆமாங்க,
உணவை
சரியா தீர்மானிச்சு
அளவை அறிந்து
உண்ணனும்.
இல்லனா,
இப்படித்தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here