வெயில் காலத்தில் அவசியம் இதை செய்யுங்க!

0
1712

வெயில் காலம் அதிகரித்து விட்டாலே பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட ஆரம்பித்து விடும். உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய உணவுப் பொருட்களை தொடர்ந்து எடுத்துக் கொள்ள சொல்வார்கள். வெயில் காலத்தில் ஏற்படுக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அதாவது எவ்வளவு டெம்ப்ரேச்சர் இருந்தாலும் அதனை நம் உடல் தனக்கு தானே கூல் செய்திடும். அதன் வெளிப்பாடாகத் தான் நமக்கு அதிக வியர்வை வருகிறது. சிலருக்கு அந்த டெம்ப்ரேச்சர் கூல் செய்து கொள்ள முடியாது. அப்படி முடியாத பட்சத்தில் தான் நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. பெரும்பாலும் இந்த ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் நம் உடலின் வெப்பநிலையில் மாற்றம் உண்டாகும் அதோடு நம் உடலில் நீர்ச்சத்தும் மிக வேகமாக குறையும்.இதனை எப்படி தவிர்க்கலாம்,ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்.

அறிகுறிகள் :

நமக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்கிறது என்பதை சில அறிகுறிகளை வைத்தே நீங்கள் கண்டுபிடிக்கலாம். முதலில் உங்கள் உடலின் டெம்ப்பரேச்சர் அதிகமாக காணப்படும். திடீரென்று சம்பந்தமில்லாமல் குழப்பங்கள் உண்டாகும், மயக்கம் வருவது, மூச்சு விடுவதில் சிரமம், சருமம் சிவந்து போவது, தலைவலி, சோர்வு,பல்ஸ் குறையும்.

குறிப்பாக வெயில் காலங்களில் முதியவர்களுக்கு இந்த பிரச்சனை அதிகம் வரக்கூடும். அதனால் அவர்கள் வெயில் காலங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

வியர்வை :

இதன் முதல் அறிகுறி உங்களுக்கு வியர்க்கவே வியர்க்காது. உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது வியர்வை சுரந்து நம் உடல் தானாகவே வெப்பநிலையை குறைக்கும். அதே வியர்வை சுரக்காத போது வெப்பநிலையை சீர் செய்திட முடியாமல் நாம் பெரும் அவதிக்குள்ளாவோம்.

இதனை ஆரம்ப கட்டத்திலேயே நீங்கள் கண்டு கொண்டால் முன்னெச்சரிகை நடவடிக்கையாக நீங்கள் உங்களை தற்காத்து கொள்ளமுடியும். இது உங்கள் உடலில் தண்ணீர் அளவை கடுமையாக குறைக்கும் என்பதால் உங்கள் உடலை ஹைட்ரேட்டடாக வைத்திருக்க நீங்கள் நீராகாரங்கள் குடிப்பது அவசியம்.

வெங்காயச் சாறு :

ஹீட் ஸ்ட்ரோக்கை குறைக்க இது முதன்மையான இடத்தை வகிக்கிறது. ஆயுர்வேதத்தில் இந்த முறை பின்பற்றப்பட்டிருக்கிறது. வெங்காயச் சாறினை காதுக்கு பின்னால் தடவிக் கொள்ள சொல்கிறார்கள் இதனால் அதீத டெம்ப்பரேச்சர் கட்டுக்குள் வருகிறது.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் சிறிதளவு எண்ணெயை விட்டு சீரகத்தைப் போட்டு பொறிந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். நன்றாக சிவந்ததும் அதனை இறக்கிவிடலாம். பின்னர் அதனுடன் தேன் கலந்து அப்படியே எடுத்துச் சாப்பிடலாம்.

 

 

 

 

புளித் தண்ணீர் :

அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய புளியில் அதிகப்படியான எலக்ட்ரோலைட்ஸ் இருக்கிறது, அதைத் தவிர விட்டமின்ஸ்,மினரல்ஸ் ஆகியவையும் நிறைந்திருக்கிறது. ஒரு கப் அளவுல்ல தண்ணீரை சூடாக்குங்கள். அது நன்றாக கொதித்து வரும் போது அதில் ஒரு ஸ்பூன் அளவு புளி சேர்க்க வேண்டும். புளியின் சாறு தண்ணீரில் இறங்கிவிடும். பின் அது ஆறியதும் அதில் சுவைக்காக தேன் கலந்து குடிக்கலாம்.

இது உடலின் வெப்பநிலையை சீர் படுத்துவதுடன் வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்கிறது.

மாங்காய் :

மாங்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக இங்கே நீராகாரமாக குடிக்கப்போகிறீர்கள். முதலில் மாங்காயை நறுக்கி தண்ணீரில் வேக வைத்திடுங்கள். பின் ஆறியதும் அதன் தோலை நீக்கிட வேண்டும். வேக வைத்த மாங்காய், ஒரு ஸ்பூன் சீரகம், புதினா இலைகள் சிறிதளவு ஆகியவற்றோடு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் இரண்டு டம்ப்ளர் நீரைச் சேர்த்து குடிக்க வேண்டும்.

ப்ளம்ஸ் :

ப்ளம்ஸ் :

ப்ளம்ஸ் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. அதோடு இவை நம் உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்தும். ஹீட் ஸ்ட்ரோக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பினை இது சரி செய்திடும். முதலில் நான்கைந்து ப்ளம்ஸ் பழங்களை தண்ணீரில் ஊறவைத்திடுங்கள். பின்னர் அத தண்ணீருடன் சேர்த்து அறைத்து அப்படியே குடிக்கலாம்.

மோர் :

மோர் :

இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு கிளாஸ் தண்ணீரைச் சேர்த்து சிறிதளவு உப்பு கலந்து குடிக்கலாம். இதைத் தவிர வெள்ளரிப்பிஞ்சு அரைத்து அதனை மோருடன் கலந்தும் குடிக்கலாம். புதினா மற்றும் மல்லி இலைகளை சுத்தமாக்கிக் கொள்ளுங்கள் அதனுடன் ஒரு இன்ச் அளவுள்ள இஞ்சியை தோல் நீக்கி சுத்தமாக்கி துருவிக்கொள்ளுங்கள். இலைகளை அரைத்து அதனை மோரில் சேர்த்துவிடுங்கள் பின் துருவி வைத்த இஞ்சியையும் சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து குடிக்கலாம்.

புதினா :

புதினா :

மல்லி மற்றும் புதினாவில் இயற்கையாகவே நம் உடலின் வெப்பநிலையை குறைக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனை குடிப்பது மட்டுமல்ல அரைத்து சருமத்தில் தடவுவதால் சருமத்தில் வெயில் காலத்தில் ஏற்படுகிற அலர்ஜியை தவிர்க்க முடியும். இவற்றை அப்படியே குடிக்கலாம் அல்லது மேலே சொன்னது போல மோரில் கலந்து குடிக்கலாம். அப்படியில்லையினில் இவை இரண்டையும் அரைத்து அதனுடன் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்காக தேன் ஆகியவற்றை கலந்தும் குடிக்கலாம்.

சோம்பு :

சோம்பு :

டெம்ப்பரேச்சரை குறைப்பதில் சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. முதல் நாள் இரவே ஒரு கைப்பிடியளவு சோம்பினை தண்ணீரில் உறவைத்திடுங்கள். பின்னர் மறுநள் காலை ஊறவைத்த அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இது உங்கள் உடலின் வெப்பநிலையை குறைவாக வைத்திருக்க உதவிடும்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

நீங்கள் குடிக்கிற தண்ணீரிலோ அல்லது ஜூஸ்களிலோ நான்கைந்து சொட்டு ஆப்பிள் சிடர் வினிகரை கலந்து குடிக்கலாம். இதில் மினரல்ஸ் மற்றும் எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் இருப்பவர்களுக்கு சிறந்த நிவாரணமாக அமையும். அதோடு வெயில் காலங்களில் அதிக வியர்வை வரும், அதிலேயே உங்கள் உடலின் அத்தியாவசியத் தேவைகளான பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் ஆகியவை கரைந்திடும். அவற்றையும் இது சரி செய்கிறது.

கற்றாழை :

கற்றாழை :

கற்றாழையில் அதிகப்படியான விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது. தினமும் கற்றாழை ஜூஸ் தயாரித்துக் குடிக்கலாம். வெயில் படுகிற இடங்களில் எல்லாம் கற்றாழை ஜெல் தடவினால் சருமப் பிரச்சனைகள் எல்லாம் மறைந்திடும்.

சந்தனம் :

சந்தனம் :

தூய சந்தனம் தான் இதற்கு பயன்படுத்த வேண்டும். அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய சந்தனத்தை பயன்படுத்த வேண்டாம். தூய சந்தனம் என்பது இளம் பிரவுன் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும்.அதனை அரைத்து உங்கள் நெற்றியில் பத்துப் போல போட்டுக் கொள்ளலாம்.

இது உங்கள் உடலின் வெப்பநிலையை குறைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here