வித்தியாசமான மெக்ஸிகன் உடையில் விஜய் – வைரல் புகைப்படம்

0
833
vijay

விஜய் விநோதமான உடையிலுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சஞ்சீவ். இவர் நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். விஜய் நடிப்பில் வெளியான ‘பத்ரி’, ‘புது கீதை’  போன்ற  படங்களில் அவருடன் இணைந்து இவர் நடித்துள்ளார். பல இடங்களில் தனக்கும் விஜய்க்குமான நட்பு குறித்து சஞ்சீவ் பேசியிருக்கிறார்.

இந்நிலையில் சஞ்சீவ், அவரது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யுடனான கடந்தகால நினைவு ஒன்று பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. சஞ்சீவ், வெளியிட்டுள்ள புகைப்படத்தில் பவானி ஜமக்காளத்தை உடையைப் போன்று விஜய் உடுத்தி இருக்கிறார். அதில் மிகவும் வித்தியாசமாக விஜய் இருக்கிறார்.

ஏறக்குறைய, நடிகர் விஜய் தனது நண்பர்களுடன் வேடிக்கையான மெக்ஸிகன் உடையில் காணப்படுகிறார். இந்தப் படம் குறித்து சஞ்சீவ் தனது பதிவில், “2014 ஆம் ஆண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போனபோது வெளிநாட்டுப் பயணத்தில் எடுக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தில்  விஜய்யின் நெருங்கிய நண்பர்களான சஞ்சீவ், ஸ்ரீமன் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் உள்ளனர்.

இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் திரையிடலுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறனர். ஊரடங்கு உத்தரவால் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here