முளைக்கீரையின் மருத்துவ பயன்கள்

0
1158
அடிக்கடி பயன்படுத்தும் கீரைகளில் ஒன்றான முளைக்கீரையின் மருத்துவ குணங்களை பற்றி காண்போம். 

 முளைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் உடலுக்கு போதிய அளவில் கிடைக்கும். 

40 நாட்களுக்கு குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல உயரமாக வளருவார்கள். 
முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து அதனுடன் மிளகாய் வற்றல் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அந்த சாற்றை வடித்துவிட்டு சோற்றில் கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில் சீரகத்தை ஊறவைத்து, உலர்த்தி, தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய், மயக்கம், ரத்த அழுத்தம் ஆகியவை குணமாகும்.
முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சல், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.
முளைக்கீரையை சாப்பிட்டால் காச நோயால் ஏற்படும் காய்ச்சல் நீங்கும். 
முளைக்கீரையுடன் சிறு பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் குடல்புண் குணமாகும்.
முளைக்கீரை சாற்றில் உளுந்து ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் நீர் கடுப்பு மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here