ப்ளூ வேல் அரக்கன் வலை விரிப்பது எப்படி? – அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள்!

0
2788

மினி பிக் பாஸ்!
பிக் பாஸ் நூறு நாட்கள் டாஸ்க் தருவது போல, இந்த ப்ளூ வேல் அரக்கன் ஐம்பது நாட்கள் டாஸ்க் தருகிறான். ஆரம்பத்தில் உத்வேகப்படுத்துதல் போல தரப்படும் சுவாரஸ்ய டாஸ்க்குகள் போக, போக மன ரீதியாக தாக்கம் ஏற்படுத்தி தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.
நள்ளிரவு பேய் படம் பார்ப்பதில் ஆரம்பித்து, கையை அறுத்துக் கொள்தல் வரை நீள்கிறது இந்த டாஸ்க்குகள். டாஸ்க் செய்ததை நிரூபிக்க படம், வீடியோ எடுத்து அனுப்ப வேண்டும்.
ஹேக்கிங்!
நீங்கள் ப்ளூ வேல் சாலஞ் எடுத்துக் கொண்டு விளையாட துவங்கும் முதல் மணி நேரத்திலேயே உங்கள் மொபைலில் இருக்கும் அணைத்து தரவுகள், நீங்கள் இண்டநெட்டில் என்னென்ன செய்தீர்கள், என்னென்ன பார்த்தீர்கள் என ஆதி முதல் அந்தம் வரை அனைத்தும் ஹேக்கிங் மூலம் திருடப்படுகிறது.

மிரட்டல்!
பாதியில் டாஸ்க் செய்ய முடியாது என பின்வாங்க முடியாது. உங்கள் காண்டேக்ட் லிஸ்ட் முதல் எடுத்து வைத்திருக்கும் ப்ளூ வேல் அரக்கன், உங்கள் இரகசிய தரவுகளை உங்கள் நெருக்கமானவர்களுக்கு அனுப்புவேன் என மிரட்டல் விடுக்கிறான். இதில் கொலை மிரட்டல்களும் அடங்கும்.
இது சார்ந்து ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண் கைதான சம்பவம் இதற்கு சான்றாக அமைந்திருக்கிறது.

ஏன் இந்த விபரீதம்?
வெளிநாடுகளில் மரண சம்பவங்கள் நடந்த போதே நாம் இதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இதில் இருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை நாம் செய்யவில்லை.
மனிதர்கள் மத்தியில் இருக்கும் சுவாரஸ்யம் தேடும் முயற்சியே ப்ளூ வேல் அரக்கனின் வலையில் விழ முதல் காரணமாக இருக்கிறது.
மேலும், மொபைல் போனுடன் தனிமையில் வாடும் நபர்கள் இந்த ப்ளூ வேல் வலையில் எளிதாக சிக்கிக் கொள்கிறார்கள்.

இதுவும் ஃபிஷ்ஷிங் தான்…
இது Fishing அல்ல Phishing, தனி நபர் தரவுகளை திருடும் ஹேக்கிங் நுட்பம். இந்த ப்ளூ வேல் சாலஞ் இயக்கி வரும் நபர்கள் இதில் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். இல்லையேல், சைன் இன் செய்த மணிநேரத்தில் தரவுகள் திருடுவது அவ்வளவு சுலபமல்ல.
உங்கள் மொபைலின் ஸ்டோரேஜ் மட்டுமின்றி, ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என ஒட்டுமொத்த தரவுகளையும் ஹேக் செய்து எடுத்து விடுகிறான் இந்த ப்ளூ வேல் அரக்கன்.
சும்மா விளையாட்டுக்கு லாக் இன் பண்ணி பார்ப்போம் என்று நுழைவோர், இப்படி தான் சிக்கிக் கொள்கிறார்கள். இது விளையாட்டல்ல, விபரீதம்!

ப்ளூ வேல்! இன்றைய தேதியில் உலக மக்கள் அஞ்சி நடுங்கும் ஒரு விபரீத விளையாட்டு. உலகில் வாழ தகுதியற்ற மக்களை அழித்து வருகிறேன் என கூறி கொண்டிருக்கும் இந்த ப்ளூ வேல் அரக்கன் விரிக்கும் வலையில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் நமது அந்தரங்கம் முழுதும் எவனோ ஒருவனின் சர்வரில் உறங்கிக் கொண்டிருக்கிறது. உங்கள் ஐ.டி மட்டும் கிடைத்தால் போதும் ஹேக்கிங் செய்து அதை தட்டி எழுப்பி, உங்கள் உறக்கத்தை சிதைத்துவிட முடியும்.


ப்ளூ வேல் எப்படி செயற்படுகிறது, அவன் எப்படி மனதளவில் ஒருவரை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறான்… விளையாட செல்லும் நபர்களிடம் இருந்து அப்படி என்ன அவனிடம் சிக்குகிறது? பல கேள்விகள், பல பதில்கள்.
இதுவரை, ப்ளூ வேல் அரக்கன் எப்படி செயற்பாடுகிறான் என அறியப்பட்டுள்ள தகவல்கள்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here