நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்கள் தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான விஷயம்!

0
2075

தொடர்ந்து தீவிரமாக ஒரு வேலையில் திடீரென்று சுருக்கென்று ஓர் வலி ஏற்படுகிறது. அந்த வலி ஏற்பட்ட நேரத்தில் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாது. அப்படியே நிலைகுலைந்து இருப்போம். அவ்வப்போது இப்படி சுருக்கென்று வலி வரும் இரண்டு நிமிடங்களில் தானாய் சரியாகிவிடும். அல்லது இதைச் செய்தால், இந்த மாத்திரையை சாப்பிட்டால் சரியாகிடும் என்று நினைத்துக் கொண்டு நாட்கணக்கில் அதைத் தொடர்கிறீர்களா?

குறிப்பாக இப்போதெல்லாம் பெரும்பாலனவர்கள் ஒரேயிடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கக்கூடிய சூழல் தான் நிலவுகிறது. இந்நிலையில் இடுப்பு வலி அல்லது முதுகுத்தண்டுவடத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதாலும் சரியான உடற்பயிற்சி இல்லை என்பதாலும் இடுப்புமூட்டு நரம்பில் பாதிப்பு உண்டாகும். அதன் ஆரம்ப கட்ட அறிகுறியாகவே உங்களுக்கு முதுகு வலி ஏற்படுகிறது.

இடுப்புமூட்டு :

இந்த வலியை சியாடிகா என்றும் வழங்குகிறார்கள். இடுப்பு மூட்டில் இருக்கும் நரம்பின் பெயர் சியாடிக். கீழ் முதுகுப்பகுதியில் வலி உண்டாகும், அங்கிருந்து மெல்ல முதுகு கழுத்துவரை வலியெடுக்கும். அல்லது சிலருக்கு கீழ்முதுகிலிருந்து முட்டி வரையிலும் கால் வலியெடுக்கும்.முதுகுத்தண்டில் இருக்கிற மிக முக்கியமான நரம்பு இது.

அழுத்தம் :

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் குடலுக்கு அழுத்தம் உண்டாகிறது. இது இடும்புமூட்டுப் பகுதியில் அமைந்திருக்கும் சியாட்டிக் நரம்பினை பாதிக்கிறது. இதைத் தவிர கட்டி, உள்ளுருப்புகளில் ஏற்படுகிற ரத்தக்கசிவு, முதுகுத்தண்டில் ஏற்படுகிற இன்ஃபெக்‌ஷன்,கர்ப்பம் ஆகியவை இந்த சியாடிகா வலிக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆரம்பத்தில் என்ன காரணம் என்பதை துல்லியமாக கண்டுபிடிக்க முடியாது.

அறிகுறிகள் :

ஒரிரு நாளில் சரியாகிற வலியா அல்லது தொடர்ந்து நீடிக்கப் போகிற வலியா என்பதை நீங்கள் சில அறிகுறிகளை வைத்தே கண்டுபிடிக்கலாம். வழக்கத்திற்கு மாறாக இடுப்புப்பகுதியில் வலியுடன் எரிச்சல் உண்டாகும்.

அந்தப் பகுதியில் மதமதப்பாக இருக்கும். உட்காரும் இடத்திலும் சிலருக்கு வலி ஏற்படலாம். கால்கள் வலுவிழந்ததாக உணர்வீர்கள்,நடப்பதற்கு, சிறிது நேரம் நிற்பதற்கே சிரமப்படுவீர்கள். இப்போது இந்த வலியைப் பற்றிய அறிமுகம் உங்களுக்கு ஓரளவுக்கு கிடைத்துவிட்டது அல்லவா? இதை ஆரம்பகட்டத்திலேயே சரி செய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்

பூண்டுப்பால் :

முதலில் பத்து பூண்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸ் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்துங்கள். அது சூடாகும் போதே பத்து பூண்டையும் லேசாக நசுக்கி அந்த பாலில் சேர்த்திடுங்கள். ஐந்து நிமிடங்கள் லேசான தீயில் கொதிக்கட்டும். சிலர் பூண்டை வெறும் சட்டியில் வறுத்து சேர்ப்பார்கள். இது சில நேரங்களில் கசப்புச் சுவையை கொடுக்கும் என்பதால் அப்படி செய்ய வேண்டாம்.

பின்னர் அந்தப் பாலை ஆறவைத்து தேன் கலந்து குடிக்கலாம்.

நன்மை :

ஒரு நாளைக்கு இரண்டு முறை இந்தப் பால் தயாரித்து குடிக்கலாம். ஏதேனும் அலர்ஜி இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றிடுங்கள். பூண்டில் மிகச்சிறந்த மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.

இது வீக்கம், பாக்டீரியா ஆகியவற்றை குறைக்கும்.

 

 

 

 

ஒத்தடம் :

இடுப்புபகுதியில் சூடான நீரில் ஒத்தடம் கொடுத்திடுங்கள். சுத்தமான துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சூடான நீரில் முக்கியெடுத்து வலியிருக்கும் இடுப்புப்பகுதியில் வைத்திடலாம். அந்த துணியில் இருக்கிற சூடு ஆறுகிற வரை அந்த துணியை அப்படியே வைத்திடுங்கள். பின்னர் மீண்டும் சூடான நீரில் முக்கி அப்படி வைக்க வேண்டும்.

சிலர் ஹாட்பேக் பயன்படுத்துகிறார்கள். ஹாட்பேக்கைவிட நேரடியாக சூடான நீரை துணியில் முக்கி வைப்பதே சிறந்தது.

 

 

 

 

 

இஞ்சி எண்ணெய் :

ஆயுர்வேத மருந்துகடைகளில் இஞ்சி எண்ணெய் கிடைக்கும். அவற்றை ஐந்து சொட்டு வரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெயை கலந்து லேசாக சூடுபடுத்தி வலியிருக்கிற இடத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திட வேண்டும்.

இஞ்சியில் ஏரளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. குறிப்பாக இதில் ஜின்ஜெரோல் என்ற சத்து இருக்கீறது. இவை சியாடிக் நரம்புக்கு வலுவூட்டும்.

பெப்பர்மிண்ட் ஆயில் :

இஞ்சி எண்ணையை போலவே மிளகுக்கீரையில் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. அவற்றையும் இந்த வலிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். நேரடியாக அந்த எண்ணெயை ஊற்றாமல் தேங்காய் எண்ணெயுடன் இந்த ஆயில் நான்கைந்து சொட்டு கலந்து பயன்படுத்தலாம்.

பெரும்பாலான வலி தீர்க்கும் மருந்துகளில் இவை பயன்படுத்தப்படும்

மஞ்சள் :

பாலில் மஞ்சள் தூள் கலந்து குடிக்கலாம். அல்லது வலி இருக்கிற இடத்தில் மஞ்சள் பத்து போடலாம். தீவிரமாக வலி இருக்கும் பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை மஞ்சள் பத்து போடுங்கள். இதிலிருக்கும் குர்க்குமின் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கக்கூடியது.

தினமும் இஞ்சி டீ தயாரித்து குடிக்கலாம்

விட்டமின் மற்றும் மினரல்ஸ் :

அன்றாட உணவுகளில் விட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் அதிகமுள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக விட்டமின் பி12,சி மற்றும் டி ஆகியவை அவசியம். ஒரு நாளைக்கு ஆயிரம் மில்லி கிராம் மக்னீசியமும் 2000 மில்லிகிராம் கால்சியமும் அவசியமாகும். இவை உங்கள் நரம்புகளை வலுவூட்டும்.

எடுத்தவுடனேயே சத்து மாத்திரைகளுக்கு செல்லாமல் சத்துக்கள் நிரம்பிய காய்கறி மற்றும் பழங்களுடன் ஆரோக்கியமான உணவுகளை எடுப்பது தான் நல்லது.

செலரி :

செலரியை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு கிளாஸில் எடுத்து அதனுடன் தேன் கலந்து குடிக்கலாம். இதனை நீங்கள் தினமும் குடிக்கலாம். இது வலியை கட்டுப்படுத்துவதுடன் நரம்புக்கும் வலுவூட்டும்.

எலுமிச்சை சாறு :

சாதரண தண்ணீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதை விட சூடான நீரில் எலுமிச்சையை கலந்து குடிப்பது நல்லது. எலுமிச்சையில் விட்டமின் சி இருக்கிறது. இவை சியாடிக் நரம்புக்கு வலுவூட்டவுதடன் உடலில் பேக்டீரியா அல்லது பிற பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால் தடுத்திடும்.

இதைத் தவிர ஆப்பிள் சிடர் வினிகர் கலந்த நீரையும் குடிக்கலாம்.

 

 

 

 

தவிர்க்க வேண்டியவை :

வலி வராமல் தவிர்க்க தொடர்ந்து ஆரோக்கியமான சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அல்லது யோகா என எதாவது ஒன்றை தொடர்ந்து செய்திடுங்கள். உட்காரும் போதும் நிற்கும் போதும் உங்களுடைய போஸ்ச்சர் எப்படியிருக்கிறது என்று கண்காணியுங்கள். உட்கார்ந்தபடி வெயிட்டான பொருட்களை தூக்குவது, அல்லது நீண்ட நேரம் ஒரேயிடத்தில் உட்கார்ந்திருப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here