ஒடிசாவில் அரிய வகை பறக்கும் பாம்பு பிடிபட்டது

  0
  1513
  ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் சைக்கிளில் ஏற்றிச்செல்லப்பட்ட விறகு கட்டைகளுக்கு இடையில் இந்த பறக்கும் பாம்பு காணப்பட்டுள்ளது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால் இதனை பார்த்த பொதுமக்கள் விலங்குகள் மீட்பு குழுவினர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த அவர்கள் அரிய வகை பாம்பை பிடித்துள்ளர். பின்னர் இது அரிய வகை பறக்கும் பாம்பு என்றும் பறக்கும் தன்மை உடையது என்று கூறினர். இந்த பாம்பு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
  இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
  ஆரனேட் ஃப்ளையிங் ஸ்நேக் என அழைக்கப்படும் அந்த அரிய வகை பாம்பு இனங்கள் இந்தியாவில் அதிகம் காணப்படுவதில்லை. இந்த பாம்பு இனங்கள் இந்தியாவில் மிகவும் குறைவாகவே காணப்படுக்கின்றன. இங்கு முதன் முறையாக இப்போது தான் நாங்கள் பார்க்கிறோம் என கூறினார்.
  இந்த அரியவகை பறக்கும் பாம்பு இனங்கள் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படுகின்றன. சிவப்பு நிற பாம்பின் உடலில் உள்ள இடைவெளிகளில் கறுப்பு குறுக்குவெட்டுகள் கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கின்றன. வட மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் ஆரனேட் பறக்கும் பாம்பு காணப்படுகிறது. விஷத்தன்மை கொண்டது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here