அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

0
326

தமிழக அரசு திட்டம் மற்றும் வளர்ச்சி சிறப்பு செயலாக்க துறை ஆணையின்படி பொருள் இயல் மற்றும் புள்ளி இயல் துறை மூலம் தமிழ்நாடு குடியிருப்போர்க்கான கணக்கெடுப்பு ஆய்வு தேர்ந்தெடுக் கப்பட்ட நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் நடத்த ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு 2 நிலைகளாக, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை என 8 ஆண்டு கால அளவில் நடத்தப்பட உள்ளது. இந்த ஆய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்ந்தெடுக் கப்பட்ட 17 நகர்புற மற்றும் 22 கிராமப்புற மாதிரிகளும் நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக தேர்ந்தெடுக் கப்பட்ட நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களை வரிசைப்படுத்தும் பணி விவரங்கள், குடும்ப நபர்களின் எண்ணிக்கை, கல்வி, தொழில், வருமானம் மற்றும் செலவீனம் ஆகியவற்றை பற்றிய கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

2-ம் கட்ட ஆய்வு பணியில், தேர்ந்தெடுக்கப்பட்ட நகர் புறம் மற்றும் கிராமப்புற மாதிரிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் குடும்ப நபர்களின் எண்ணிக்கை, கல்வி, தேர்ச்சித்திறன், உடல் நலம், வேலை, வாழ்க்கைத் தொழில், வருமானம், செலவீனம், சமூகநிலை, சமுதாய சேவை மற்றும் தொழில்நுட்பம் பயன்படுத்தும் திறன் ஆகிய விவரங்களை கணக்கெடுக்கும் பணி நடைபெறவுள்ளது.

இந்த ஆய்வின் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் கொண்டு எதிர்வரும் காலங்களில் சமுதாய மற்றும் பொருளாதார நிலைக்கு ஏற்ப அரசின் திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வு பணியில் புள்ளி இயல் துறை அலுவலர்கள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் ஆய்வு பணி மேற்கொள்ள வரும் போது பொதுமக்கள் உரிய ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here